திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று நடிகை குஷ்பு, கடந்த சில வருடங்களுக்குமுன்பு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம், அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், திருமணமான ஆண் - பெண் இடையே கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறும்போது, இந்த விஷயம் குறித்து 15 வருடங்களுக்கு முன்பு பேசினேன். அதற்கு இப்போது, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னோட பேச்சுதான்.
ஒரு விஷயம் இருக்கு, அதை எவ்வளவு நாட்கள்தான் பேசாமலேயே இருக்கப்போறோம். பிரச்சனையைப் பற்றி பேசினால்தான் தீர்வு கிடைக்கும். ஒரு 15 வருடத்துக்குப் முன்பு நான் பேச ஆரம்பித்தேன், அதற்கான தீர்ப்பு இப்ப கிடைத்துள்ளது.
மனைவி இருக்கும்போது, இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டல் அது மனைவிக்கு செய்யும் துரோகம். கணவன் இருக்கும் போது, மனைவி இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால், அது கணவருக்கு செய்யும் துரோகம். அதனைக் காப்பாற்ற வேண்டியது இருவரிடம் மட்டுமே உள்ளது.
தவறு நடக்கும்போது, பெண் மீதுதான் அனைத்து தவறுகளும் இருப்பதாக நினைக்கிறார்கள், ஏன், பல பெண்களே அப்படித்தான் பார்க்கிறார்கள். தவறான நோக்கத்தோடு பெண்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாற்றம் வந்தாலே போதும் என்று நடிகை குஷ்பு கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.