05/10/2018

மறைத்து வைத்து மறக்கப்பட்டு மறந்தது எது...


இப்பிறப்புக்கு முன் "நான்" என்கிற உணர்வு எங்கிருந்தது என்பதையும், இறப்பிற்குப்பின் நான் என்கிற உணர்வு எங்கு சென்று மறையும் என்பதையும் நாமறியோம். ஆனால், பிறப்புக்கும் / இறப்புக்கும் நடுவில் "நான்" என்கிற உணர்வு மட்டும் எங்கிருந்து வந்தது..? இப்படி இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருப்பதாக எங்கு, யாரால், எப்படி உணரப்படுகிறது..?

இதில்,
உணர்வது எது..?
உணரப்படுவது எது..??
உணர்வுகள் யாது..???

அதாவது,
காண்பது யார்..?
காணப்படும் பொருள் எது..??
காட்சிகள் யாது...???

இவற்றில் உண்மைதான் எது... ஆக, நான் நானாய் இருக்கிறேன் என்பதை யாருக்கு, எப்படி உணர்த்துவது... உணர்த்த உயிரும் உணரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.