பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,தமிழக வனத்துறை வசமுள்ள,பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.
அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.
நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.
பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.
தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.
ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.
இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.
முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.
தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக் கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.
இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.
இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.
வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.
ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?
இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.