மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் ஏன் கூட்டணி வைத்தோம் என்ற விளக்கத்தையும் அதற்கான காரணிகளையும் எடுத்து சொல்லிவந்தார்.
தமிழக மக்களின் நலன் குறித்தே கூட்டணி அமைத்ததாவும் எங்கள் கொள்கைகளில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்று விளக்கி விட்டு செய்தியாளர்களை கேள்விகள் கேட்க அறிவுறுத்தினார்.
அப்போது செய்தியாளர்களில் ஒருவர் நான் உங்கள் போட்டி ஊடகம் சன் நியூஸ் என்றும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று மிகவும் வீம்பாக பேசினார்.
கூட்டணி வைக்கவில்லை என்று சொன்ன நீங்கள் கூட்டணி வைக்கிறீர்களே இது உங்கள் கொள்கைக்கு ஏற்புடையதா என்றும் நீங்கள் கூட்டணி வைத்தது தமிழர் நலனுக்கா இல்லை உங்கள் நலனுக்காக என்பதுபோல் கேட்டார்.
இதற்கு சற்று கோபம் அடைந்த அன்புமணி நிதானமாக தனது பதிலை எடுத்து சொன்னார் அதில்...
1) திமுக என்ற கட்சியே முதலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் தற்போது இவர்கள் எந்த அடிப்படையில் கூட்டு சேருகிறார்கள்?
2 ) கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக அடித்துக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் திமுக கூட்டணியில் ஒன்றாக இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டார்
3) கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருமாவளவன் திமுக குறித்து ஊழல் கட்சியென்றும் இனி திமுக அதிமுக இரண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னார் இப்போது என்ன ஆனது
4) எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியினர் உடன் இனி கூட்டணி இல்லை என்று 2013 இல் சொன்னார் இப்போது எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடம் துண்டை போட்டு காத்திருக்கிறார்.
5 ) இந்திரா காந்தி அம்மையார் தமிழகம் வந்த போது அவர்கள் மீது கல்லெறிந்து ரத்தம் வருகையில் மாதவிடாயா என்று கொச்சை படுத்திய திமுகவிடம் எப்படி காங்கிரஸ் கூட்டு சேர்ந்தது.
6 ) வைகோ பேசிய பேச்சிற்கு இன்று ஸ்டாலின் கூட்டணியில் சேர்க்கலாமா எதன் அடிப்படையில் இப்படி ஒரு கூட்டணி அமைந்தது?
இதற்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்க வாயடைத்து போய்விட்டார் அந்த கேள்வியை கேட்ட செய்தியாளர் மேலும் உங்களது நோக்கம் எங்களது கூட்டணிகுள் குழப்பம் விளைவித்து எப்படியாவது மீன் பிடிக்கலாம் என்று தானே இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள் என்னிடம் கேட்கும் இதே கேள்வியை நீங்கள் நான் சொன்ன அனைவரிடமும் ஒரு நாள் கேளுங்கள்.
ஸ்டாலினை பார்த்து உங்களது கூட்டணியில் உள்ள வைகோ மிக கேவலமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்ச்சித்தாரே எப்படி இணைந்தீர்கள் என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு ஊடகமாவது கேள்வி கேளுங்கள் என்று வெளுத்து வாங்கி விட்டார் மொத்தத்தில் அன்புமணியின் இன்றைய பேச்சு திமுகவிற்கும் அதன் பினாமி ஊடகங்களுக்கும் கொடுத்த சவுக்கடியாகத்தான் பார்க்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.