26/02/2019

பாமக - அதிமுக கூட்டணி பற்றி...


அதிமுகவை முழுதாக கைப்பற்றி ஆட்டைய போடலாம் என கனவுக் கண்டுக் கொண்டிருந்த  டிடி.வீரபாகு தினகரனுக்கு, அதிமுக உடன் பாமக அமைத்த கூட்டணி அந்த கனவில் முற்றிலுமாக மண்ணள்ளி போட்டு கலைத்துவிட்டது...

சீட் ஒதுக்கீடு மற்றும் மோடியை முதன்மைப்படுத்தாமல் அதிமுக-பாமக கூட்டணி என்று அழுத்தமாக கூறுவதும், பாஜகவோடு அதிகம் உறவாடாமல் பாமகவுடன் நட்பை மாறி மாறி பகிர்ந்துக் கொள்வதும், பாஜகவின் ஆதிக்கத்தின் கீழ் அடங்காமல் பாமகவின் பலத்தோடு மெல்ல மெல்ல சுயமாக செயல்படுவதற்கான அதிமுகவின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளே!

பாமகவை விட அதிகம் சீட் கேட்டது மட்டுமல்லாமல் பாமக கேட்ட அதே சீட்டையும் கேட்ட தேமுதிகவை அப்படி ஒரு கூட்டணியே தேவையில்லை என ஓரமாக காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதற்கும் பாமகவே கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க வேண்டுமென்ற அதிமுகவின் எண்ணமே காரணம்.

பாமகவுடன் ஏற்பட்ட மோதலில் ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து தனது டிவியில் பாமக பற்றிய செய்திகளை புறக்கணித்தும், பாமக விரோத செய்திகளை பரப்பியும் பாமக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக ஒரே கூட்டணிக்குள் இது முரண்பாடு ஏற்படுத்தும் என்பதால் அவருக்கான தொகுதியும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படாமல் அந்த கட்சியை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாராக உள்ளது. இதன் எதிரொளியாக தான் நேற்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளையுமே அப்புறபடுத்த வேண்டுமென பச்சமுத்து பேசியது.

அதிமுக முற்றிலுமாக பாமக விருப்பத்திற்கே தனது கூட்டணியை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம். வட மாவட்டங்களில் பாமக தயவோடு பல தொகுதிகளில் வெற்றிக் கொடி ஏற்ற முடியும் என்ற உறுதியான நினைப்பும், 21 தொகுதிக்கான இடை தேர்தலில் பாமக துனையோடு வெற்றி பெற்று ஆட்சியை தொடர முடியும் என்ற நம்பிக்கையுமே.

பாமக அதிமுகவுடன் கூட்டணி போனது அதிமுக துனையோடு வெற்றிபெற என்பதற்காக அல்ல. ஏனெனில் பாமக திமுக பக்கமாக போயிருந்தால் இதே தொகுதிகளும் அரசின் மீதான அதிர்ப்தியால் எளிதான வெற்றியும் பெற முடியும் என்பது பாமகவிற்கு தெரிந்த ஒன்றே.

ஆனாலும் அதிமுகவுடன் கூட்டணிக்கு போயுள்ளது என்றால்? அது அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து சில நல்ல விஷயங்களை சாதித்து காட்டி அதன் மூலமாக மக்களிடம் ஏற்படும் அவப்பெயரை காணாமல் போக செய்யவே ஆகும்.

இதுவரை கூட்டணி அமைத்த எந்த கட்சியும் கூட்டணிக்கான நிபந்தனைகள் இதுஇதுவென வகைபடுத்தி அதை கோரிக்கையாக வைக்காத போது பாமக அந்த கோரிக்கையை வைத்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் புதிதான ஒன்று. இது வெற்று நிபந்தனையாக போகாது. ஏனெனில் இரு கட்சிகளின் கூட்டணி அறிவிப்பின் போதே வாசிக்கப்பட்ட நிபந்தனைகள் இவை. முன்னரே இதற்கு அதிமுக ஒப்புக் கொண்டதால் தான் அதிமுகவை வைத்துக் கொண்டே பாமக இந்த நிபந்தனைகளை மக்கள் முன்பாக பிரகடனம் செய்தது.

கூட்டணி இல்லாமல் எதையும் இந்த மக்களை நம்பி சாதிக்க முடியாது என்பதை கடந்த தேர்தல் மூலமாக பாமக முழுதாக உணர்ந்துக் கொண்டது. இனி இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்லி ஓட்டு கேட்காமல் இதைஇதை செய்தோம் என சொல்லி ஓட்டுக் கேட்க தயாராகி உள்ளது.

தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் நாலு நல்ல விஷயம் நடக்குமென்றால் எந்த கட்சியோடும் கூட்டணிக்கு போய் சாதிக்கலாம். என்பதே பாமகவின் தற்போதைய நிலைபாடாக உள்ளது.

விரைவில் ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேறும் போது இப்போது புழுதி வாரி இறைக்கும் மாற்றுக் கட்சியை சேர்ந்தோர்களே இந்த கூட்டணியை கொண்டாடி மகிழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிழல் பட்ஜெட், கண்டன அறிக்கைகள், அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் என எழுத்தின் மூலமாக நிழல் அரசாங்கம் செய்துக் கொண்டிருந்த பாமக இனி மறைமுகமாக அரசை வழிநடத்தி சாதிக்க போகிறது.

ஆக, இனி பாமகவின் வழிகாட்டுதலிலும், பாதுகாப்பிலும் தான் அதிமுக ஆட்சி செய்ய போகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.