16/02/2019

சந்தோஷத்திற்கான 7 ரகசியங்கள்...


இன்றைய நவீன மயமான உலகிற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்ட மனிதன் அந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு மட்டும் விடை தேடிக்கொண்டிருக்கிறான்.

இந்த உலகமானது ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக வாழ்வதற்கு படைக்கப்பட்டதே தவிர கவலைப்படுவதற்காக படைக்கப்படவில்லை.

ஆனால் ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.

ஒரே மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.

நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.

நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.

நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.

மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

உள்ளத்தை பக்குவப்படுத்திக் கொண்டு பொறாமைகளை அறவே ஒழித்தெறிந்து, இருப்பதையும், கிடைத்ததையும் வைத்து ஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால் இளமையுடனும், அமைதியுடன் சந்தோசமாய் வாழ முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.