முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரசல் மேத்தாவின் ஷ்லோகா மேத்தாவின் திருமணம் மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்லோகா ஆகாஷ் அம்பானியின் சிறுவயது தோழி ஆவார்.
இவர்களின் திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இளஞ் சிவப்பு நிற பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேற்புறத்தில் சூரிய ஒளியில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்கள் நடுவே ராதையும், கிருஷ்ணனும் இருக்கிறார்கள்.
அதனை திறந்த உடன் மேல் பகுதியில் வெள்ளி பிரேமில் ராதா-கிருஷ்ணன் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்த உடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்ககங்கள் விரிகின்றன. ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ 1.5 லட்சம் ஆகும்.
அடுத்ததாக ரதத்தில் இருக்கும் வெண்ணிற விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியின் அழைப்பும் உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.