நல்லா கவணிங்க 35 வருடங்களுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது...
35 வருடங்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை விட 10 மடங்கு குறைவு காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமத்தின் விளைவாக கடந்த 35 ஆண்டுகளில் நம்தேசம் பெரிய தீவிரவாத தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற பட்டுள்ளது.
ஆனால் தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்து நிற்கும் இன்றைய நாளில் எப்படி இப்பேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது?
இரண்டு நாட்களில் 350 கிலோ மதிப்புள்ள வெடிப்பொருட்கள் ஒரு காரில் நுழைந்துள்ளது.
எப்படி இந்த வெடிப்பொருட்கள் இவ்வளவு எளிதாக நுழைந்திருக்க இயலும்?
காஸ்மீரில் குடியரசுதலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதங்கள் கூட முடிவுறாத நிலையில் மாநில கட்சிகளில் ஏற்படாத இந்த நிர்வாக அலட்சியம் இந்த ஆட்சியில் எப்படி நிகழ்ந்தது?
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஒன்றும் காட்டுப்பகுதி அல்ல மக்கள் நடமாடும் பகுதி இந்த பகுதியினுள் தீவிரவாதிகள் நுழைய முடிகிறது எனில் அதற்கான வாய்ப்புகள் எப்படி சாத்தியம்?
பிப்.6 உளவுத்துறை தகவல் அளித்தும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாதது ஏன்?
உ.பியின் பாஜக நிர்வாகி ஒருவன் தீவிரவாதிகளுக்கு தேசத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு ஈனச்செயலை செய்து கைது செய்யப்பட்ட இரண்டே தினங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
எல்லையில் சிறு சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கூட அவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான பகுதியுள்ளே மிக எதார்த்தமாக திட்டமிடுதலோடு ஒரு தாக்குதல் எப்படி சாத்தியமானது?
மத்தியரசுக்கு இதனுடைய எதிர்கால பாதிப்புகள் எச்சரிக்கையூட்டப்பட்டும் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையையும் இந்த மானங்கெட்ட அரசு அன்றே எடுத்திடாமல் அலட்சியம் செய்துள்ளது.
உண்மையாகவே இறந்த இராணுவ வீரர்கள் மீது மதிப்பு இருந்தால் இதற்குள்ளே செய்யப்பட்டு இருக்கும் அரசியலே சற்று சிந்தித்து பாருங்கள்.
"கோ" திரைப்படத்தின் சில காட்சிகளோடு இதனை தொடர்புபடுத்தி பாருங்கள்.
அரசியல்வாதிகளின் அற்ப அரசியலுக்காக 45 அப்பாவி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனம்.
கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்வதையும் சொல்வதையும் மட்டுமே நம்பாமல் மேற்கூரிய சம்பவங்களோடு தேர்தலையும் இணைத்து சற்று சிந்தித்து பார்த்து முடிவெடுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.