எங்க அம்மாவைக் கண்டுபிடித்து தாருங்கள் - கதிராமங்கலத்தில் போராடும் பெண் குழந்தைகள்...
நேற்று கதிராமங்கலத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் என்னுடைய அம்மாவும் கலந்துகொண்டார். முதலில் கைது செய்வதாக மிரட்டியவர்கள் கைது செய்யவில்லை எனினும் இன்னும் என் அம்மா வீட்டிற்கு வரவில்லை’ என அவரின் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் மூவருமே பெண்க்குழந்தைகள் இதுவரை எங்கள் அம்மா எல்லா போராட்டத்திலும் கலந்துக்கொண்டவர் என் கிராமம் காக்க நானும் போராடுவேன் என போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் கலையரசி எங்களுக்கும் பெருமையாக இருக்கும் அவர் எப்போதும் தைரியமானவர் எதற்கும் துணிந்து போராட வேண்டும் என்று சொல்லுவார் இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை காவல்துறையும் எங்களுக்கு எவ்வித தகவல்களும் தெரிவிக்க மறுக்கின்றனர் .கேட்டாலும் சரியான தகவல் சொல்ல மறுக்கின்றனர், ஆனால் அம்மா மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர் நாங்களும் எங்கள் உறவினர்களிடம் விசாரித்து விட்டோம் ஆனால் அம்மா எங்குமே இல்லை” என்கிறார் கண்ணீருடன்.
கலையரசி என்பவர் கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர் அதற்காக இவர் மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. நேற்று திடீரென ஓ.என்.ஜி.சியை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதனை தடுத்து நிறுத்தச்சென்ற பேராசிரியர் ஜெயராமன், இராஜூ என்பவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் கலையரசி, ஜெயந்தி,சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர் தற்போது இவர்கள் மூவருமே காணவில்லை எந்த வித தகவல் தொடர்பும் இல்லை நாங்கள் எங்கள் ஊருக்காகத்தான் போராடுகிறோம் ஆனால் எங்களை தேசவிரோதிகள் போல் நடத்துகின்றன அம்மா இல்லாமல் எங்களுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை அழுகை மட்டுமே எங்களுக்கு சொந்தமானதுப்போல் ஆறுதல் இழந்து நிற்கின்றோம் தனியாக இருக்கின்றோம் தந்தையும் வெளிநாட்டில் உள்ளார்.
நேரம் செல்ல செல்ல உயிரோடு அம்மா இருக்கிறாரா? இல்லையா? என்ற எண்ணமே தோன்றுகிறது. அம்மாவை தாருங்கள் என்று தான் கேட்கிறோம் அதையும் இந்த அரசு செவிசாய்க மறுக்கிறது. ஊர்மக்கள் மட்டுமே உதவுகின்றது வேறு யாரும் வரவில்லை என்கிறார் கலையரசியின் மகள் தேவதர்ஷினி. நிர்க்கதியாக நிற்கின்றோம் ,இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராமக்கிருஷ்னனிடம் பேசியபோது நாங்களும் அவர்களை தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம் அவர்கள் மீது அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளோம் எனவே அவர்கள் காவல்த்துறைக்கு பயந்தே தலைமறைவாக இருக்கவேண்டும் அவர்களை நாங்கள் மறைத்து வைக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறினார்
இதை நாம் அந்தக்குழந்தைகளிடம் கூறிய போது எங்களுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை கண்முன் அம்மா இல்லை என்பது மட்டுமே தெரிகின்றது என்கின்றனர் வாடிய முகத்துடன் அந்த மூன்று குழந்தைகளும்...
(கடந்த 10 நாட்களாக திருவாரூர் நாகப்பட்டினம் என பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் எதிராக இரவு பகலாக போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது.
பெண்கள் இன்று நேரடியாக போராட்டத்தில் இறங்கி ஒன்றினைந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.
பல வழக்கு கைது என இன்றும் தொடர்கிறது)...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.