15/07/2020

அந்தரத்தில் தொங்கும் கோட்டை கதவு சங்ககால இலக்கியத்தின் வரலாறு...



சங்ககாலத்தில் மனிதனை கடவுளாக உயர்த்தவில்லை என்பதற்கு ஆதாரம்...

தூங்கெயில் கதவம்.?

இப்படி ஒரு பெயர் நாம் கேள்விப்பட்டதே இல்லை அப்படித்தானே..

பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்ற இந்த பெயர் நமக்கு தெரியும்.

ஏறக்குறைய மேலே சொன்ன தூங்கெயில் கதவம் என்ற வார்த்தையும் தொங்கும் தோட்டம் என்ற வார்த்தையும் ஒரே அடிப்படை விஷயத்தை சொல்வதாகவே உள்ளது...

சங்க காலத்தில் இந்த தூங்கெயில் கதவம் என்ற ஒரு அரண்மனை கதவு பற்றி வரலாற்றில் உள்ளது..

அதாவது நிறைய பேர் இந்த வார்த்தையை தவறாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதாவது இன்றைய காலத்தில் பாபிலோனில் உள்ள தொங்கும் தோட்டத்தை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் எங்கள் மன்னர்கள் தொங்கும் அரண்மனையே அந்த காலத்தில் காட்டியுள்ளனர் என்று..

இது தவறு சங்ககாலத்தில் பிரமாண்ட அரண்மை கட்டியது உண்மை தான் அதற்கு கதவு இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் கட்டிய பிரமாண்ட கதவு தான் இந்த தூங்கெயில் கதவம்...

இதை கீழிலிருந்து மேல் நோக்கி பார்த்தல் அதன் பிரமாண்டத்தால் தொங்கும் அமைப்பில் இருப்பதால் வரலாற்றில் தொங்கும் கதவு,  கால ஓட்டத்தில் வார்த்தை வளர்ந்து தொங்கும் அரண்மை ஆனது..

இப்படியும் இருக்கலாம்...

அடுத்து இன்றைய காலத்தில் மேல்நோக்கி செல்லும் கதவுகள் உண்டு அதாவது லிப்ட்.. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இது இருந்து இருக்கலாம் என்ற கருதும் உள்ளது..

கோட்டையில் உள்ள  பிரம்மாண்ட கதவு திறப்பதற்காக மேல் நோக்கி செல்லும் பொழுது  மேலே அந்தரத்தில் தொங்குவது போன்றே இருக்கும் ஒருவேளை இதை வைத்துகூட சங்க கால புலவர்கள் இப்படி தொங்கும் கதவு என்று எழுதி இருக்கலாம்..

இதை கட்டிய அரசனின் பெயர் தான் ஆச்சர்யமானது, அதாவது இன்று சேரன் சோழன் பாண்டியனை கூட நம்மில் சிலர்  கடவுளாக வழிபடுகின்றனர்.. அவர்கள் நம் முன்னோர்கள் என்பதை தாண்டி கடவுள் அந்தஸ்தை கொடுப்பது தவறு,  இதனால் தான் கடவுள் தன்மையை மனிதனுக்கு கொடுத்து கடவுள் நம்பிக்கையை நாம் கெடுத்துவிட்டோம் ...

ஆனால் இந்த சேர சோழ பாண்டியன் அரசனுக்கெல்லாம் முன்னதாக வாழ்ந்த ஒரு அரசன் தான் இந்த தூங்கெயில் கதவத்தை கட்டினான்...

அவனின் பெயர் என்ன தெரியுமா ?

கடவுள் அஞ்சி ...

இந்த பெயரை இதுவரை நாம் கேட்டது கூட கிடையாது அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களை கடவுளாக சிலர் உயர்த்துகின்றன, அந்த முன்னோர்களுக்கெல்லாம் முன்னாள் வாழ்ந்த மூதாதையர்கள் கடவுள் உள்ளார் என்பதை நம்பி அந்த கடவுளுக்கு நம் பிள்ளை அஞ்சி குற்றமற்றவனாக வாழ வேண்டும் என்று கடவுள் அஞ்சி என்று பெயரிட்ட வரலாறு நம் சிந்தித்தால் விளங்கும்..

கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

பதிற்றுப்பத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.