வரிப் போடுவது எஞ்சாமி..
வாரிச் சுருட்டுவது உஞ்சாமி.
பகிர்ந்தளிப்பது எஞ்சாமி..
புடுங்கி தின்பது உஞ்சாமி.
கால் கவுட்டில் பிறந்தது எஞ்சாமி..
கண்ட இடத்தில் பிறந்தது உஞ்சாமி.
தொட்டுக் கும்புடுவது எஞ்சாமி..
தொட்டா தீட்டு உஞ்சாமி
நெறஞ்சு கும்புடுவது எஞ்சாமி..
நா பேசுறதே புரியாதது உஞ்சாமி .
நெனைக்குறப்ப வாடாங்கிறது எஞ்சாமி..
நாளு, மாசம் சொல்லி கூப்பிடுறது உஞ்சாமி.
மண்மேடோ மரத்தடியோ போதுமுடாங்கிறது எஞ்சாமி..
கோபுரம், கோயிலுனு கேக்கும் உஞ்சாமி.
குளிச்சாத்தேன் ஏத்துக்கும் உஞ்சாமி..
குடிச்சாலும் ஏத்துக்கும் எஞ்சாமி.
தெனத்திக்கும் அபிசேகம் கேக்கும் உஞ்சாமி..
வெறுங்கையோட போயி கும்புட்டாலும் ஏத்துக்கும் எஞ்சாமி.
உஞ்சாமிக்கி ஐயரு..
எஞ்சாமிக்கி பூசாரி.
உஞ்சாமிக்கி சமஸ்கிருதம்..
எஞ்சாமிக்கி தமிழ்.
எஞ்சாமிக்கி சாராயம்..
உஞ்சாமிக்கி மூத்திரம்.
எனக்கு தெய்வம்..
உனக்கு கடவுள்.
எஞ்சாமிக்கி வாக்கு..
உஞ்சாமிக்கி வேதம்.
எஞ்சாமி கறி திங்கும், வேத மரபை ஏத்துக்காது.
மொத்தத்திலே
எஞ்சாமியும் இந்துவல்ல,
நானும் இந்துவல்ல..
எஞ்சாமி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.