15/07/2020

மனித எலும்புக்கூடுகளில் இருந்து பறவையின் எச்சம் வரை...



நான் ஏற்கனவே சொன்னது போன்று செய்வதறியாது திகைத்த இத்தாலி எடுத்த முடிவு தான் மனித எலும்புகளை
கொள்ளையடிப்பது என்பது..

இதை பற்றி போன பதிவில் கூறினேன் அதன் தொடராக இதை படித்துக் கொள்ளுங்கள்..

மனித எலும்புகளை மண்ணுக்கு கொடுத்து மண்ணை உயிர்பிக்கலாம்  என்ற கருத்து சில நாட்களில் முடிந்தது..

காரணம், எவ்வளவு நாளைக்கு தான் மனித எலும்புகளை தேடி அலைவது இதற்காக வேறொரு தீர்வை தேடியது இத்தாலி அரசு இதற்காக அணுகிய நபர் பிரெஞ்சு ஆய்வாளர் அலெஸ்ஸாண்டேர் கோஹெட்..

இவர் ஆய்வு செய்து மண்ணுக்கு உயிரூட்ட அடுத்த பொருள் இது தான் என்று அறிவித்தார்..

இதை கேட்ட அரசு மண்டை குழம்பியது..

காரணம் அவர் சொன்ன பொருள் பறவையின் எச்சங்கள்...

இருப்பினும் தன் மக்களின் வாழ்க்கையில் அக்கறையுள்ள இத்தாலி அரசு பல வணிக கப்பல்களை  பல தீவுகளுக்கு அனுப்பி பறவையின் எச்சங்களை தேடி கொண்டு வர அனுப்பியது..

பெரு நாடு கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே...

இந்நாட்டின் அருகே பல குட்டி தீவுகள் இருப்பதையும் அங்கே பல வருடங்களாக கடல் பறவைகள் வாழ்கின்றன என்பதையும் அறிந்து கொண்ட வணிக கப்பல்கள் அவைகளின் திசையை நோக்கி விரைந்தது.

இந்நிலையில் பெரு நாட்டின் அருகேயுள்ள குட்டி தீவில் ஒன்று தான் பாறை தீவு..

இந்த தீவில் மனித நடமாட்டமே பல ஆயிரம் வருடங்களாக இல்லை என்பதே ஒரு தனி சிறப்பு மனித நடமாட்டம் இல்லாத தீவில் பறவைகளின் இராஜ்ஜியம் தான்..

ஆகவே பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் [புதையலான] பறவையின் எச்சங்களை தோண்டி வெட்டி எடுத்து கப்பலில் ஏற்றும் பனி தீவிரமானது..

சும்மா கிடையாது.. இதன் தீவிரத்தை அறிய ஒரு தகவலை சொல்லுகிறேன் பாருங்கள்..

உலகின் பணக்கார நாடுகள் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 99 பிரமாண்ட வணிக கப்பல்கள் பெரு நாட்டை நோக்கி வந்ததாக வரலாறு உள்ளது எல்லாமும் பறவையின் எச்சங்களுக்காக தான்..

அப்போதே அமெரிக்கா 66 தீவுகளை கைப்பற்றி அது ஒருபக்கம் எச்சங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது..

அதில் இன்றும் கூட ஏறக்குறைய 8 தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது..

இங்கிலாந்தில் 1847 ம் ஆண்டு இறக்குமதியான பறவையின் எச்சத்தின் அளவு 2 லட்சத்தி இருவது ஆயிரம் டன்..

அவைகள் அனைத்தையும் அந்நாட்டு விவசாயிகளுக்கு வயலில் உரமாக இட கட்டாய சட்டம் பிறப்பித்தது அரசு..

அடிமை முறைகள் அக்காலத்தில் ஒழித்து இருந்த சமயமானதால் வேளைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அதாவது பறவைகளின் எச்சங்கள் பலநூறு வருடம் ஒரே இடத்தில இருப்பதால் சின்ன சின்ன பாறைகள் போன்று அழுத்தமாக இருக்கும் உடைத்து எடுப்பது சாதாரணகாரியம் அல்லவே..

இதற்காக சீனா தேசத்தில் இருந்து தொழிலார்கள் கொண்டு வரப்பட்டு ஏறக்குறைய அடிமை போன்றே வேலை வாங்கப்பட்டார்கள்..

வேறொரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை வேறொரு நாட்டு தொழிளார்களை வைத்து தமது நாட்டிற்கு திருடிய கும்பல்கள் தான் இன்றைய வல்லரசுகள்..

பறவையின் எச்சங்கள் வெறும் நைட்ரைட் தரக்கூடியது மட்டுமல்லவே இதில் இன்னொரு பெரிய பிரச்சனையும் வந்தது அது என்ன தெரியுமா ?

DND என்ற வெடிபொருளுக்கும் நைட்ரேட் தேவை அப்போ இந்த பறவையின் எச்சங்கள் புதையல் தானே பணக்கார நாடுகளுக்கு..

இதன் முடிவு எங்கே போனது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்..

நீங்கள் நம்புவீர்களா ? பறவையின் எச்சத்திற்காக ஒரு பெரும் போரே நிகழ்ந்தது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.