1789 இல் திப்பு சுல்தான் கொச்சி டச்சுப்படைக்கு எழுதிய கடிதம் மற்றும் அதற்கு டச்சு தரப்பில் அனுப்பப்பட்ட மறுமொழி இங்கே தரப்பட்டுள்ளது.
இதில் மலையாளம் தமிழ் எழுத்துக்களில் எழுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
சான்று: The dutch in malabar (page 110)
அதாவது 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வட்டெழுத்து முறையுடன் சமஸ்கிருத உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதி மலையாள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
(இந்த கிரந்த எழுத்துகள் தமிழ் வடிவம் தழுவியவை, சமஸ்கிருதம் எழுதவே இந்த கிரந்த முறை அதிகம் பயன்பட்டது).
இப்படி கேரளா முழுவதும் பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றின.
1500 களில் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர் மலையாள எழுத்துக்களை ஒழுங்காக்கி தொகுத்து தற்போதைய மலையாள எழுத்துருவைத் தோற்றுவித்தார்.
ஆனால் 1800 கள் வரை புழக்கதில் கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துக்களே இருந்தன.
1772 இல் மலையாளம் அச்சில் ஏறியது.
1842 இல் முதல் முழுமையான மலையாள புத்தகம் வெளிவந்தது.
1872 இல் மலையாள அகராதி வெளிவந்தது.
இறுதியாக கேரளத்தின் வடபகுதியான மலபார் 1950 களில் தமிழ் எழுத்துருக்களை கைவிட்டது.
1971 இல் தான் மலையாள எழுத்துக்கள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டு தற்போதைய வடிவத்தை அடைந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.