17/08/2020

பாஜக வால் பழிவாங்கப்பட்ட கிரிக்கேட் வீரர் டோனி...


எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது தான். இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது.

2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சியான பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது.

அந்த நேரத்தில் பாஜக'விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். ஆம்! இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது.

பாஜக உடனடியாக அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் MS.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

இதெல்லாம் பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் வந்த ஆதாரப்பூர்வமான செய்திகள்.

2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை நியமித்து அவர்மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. எந்த மிரட்டலுக்கும் தோனி பணிவதாக இல்லை. தன்னுடைய திறமையால் கிடைத்த பிரபல்யத்தை யாருடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் கொடுக்க MSD தயாரில்லை.

இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோய் மண்ணை கவ்வியது. அவர்களின் கோபம் எல்லாம் தோனியின் மேல் திரும்பியது. BCCI தரப்பில் தோனியிடம் தெளிவாக சொல்லப்பட்டது இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீ தேர்ந்தெடுக்கப்பட மாட்டாய் என்று. 2020 ஆம் ஆண்டிக்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து செயலாளர் ஜெய்ஷாவால் தோனி தூக்கி ஏறியப்பட்டார். இவ்வளவு பெரிய சீனியர் வீரருக்கு கிரேட்-A வீரருக்கு கண்டராக்ட் கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்கு தான்.

இந்தியாவே கொண்டாடும் ஒரு வீரன், இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்தவன், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு, வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தான்.

எந்த நாடும் தன்னுடைய வெற்றி வீரனுக்கு செய்யாத துரோகம் இழைக்கப்பட்டான் MSD.

Anyway... தோனிக்கான அங்கீகாரம் மக்களிடம் என்றுமே இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றென்றும் தோனி வாழ்வான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.