17/08/2020

எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தமிழ் மற்றும் கல்வித்துறை...


தமிழ் மற்றும் கல்வித்துறை...

1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.

2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.

3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.

4.  அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.

5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.

6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.

7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.

8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.

9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.

10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.

11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.

12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.