27/08/2020

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளே இது மனித உரிமை மீறல் ஆகாதா?


குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ளது பாதல் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் 14நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்று இன்று மதியம் நலமுடன் வீடுதிரும்பினார்.  இன்று மாலை பல்லாவரம் நகராட்சி ஆணையரின் உத்திரவின்படி அந்த வளாகத்தில் ஒரு பகுதி வாயிலை அடைக்க வந்தார்கள்.

அப்போது குடியிருப்போரின் போராட்டத்தினால் அந்த வீட்டின் வாயிலை மட்டும் அடைத்தார்கள்.

எல்லோரும் கெஞ்சியும் கேட்காத ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடியாது வகையில் அடைத்து விட்டார்கள். அந்த வீட்டில் சிறிது நாட்கள் முன் தான் ஒரு முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.

இப்படி நகராட்சி இரக்கம் இன்றி நடந்தால் என்ன செய்வது.  திடீரென்று அந்த முதியவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி மருத்துவமனைக்கு செல்வார்கள்.

இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்காகவா அல்லது அவர்கள் உயிர் போக்கவா.

தமிழக அரசு உடனடியாக பல்லாவரம் நகராட்சி ஆணையாளர்
திரு. மதிவாணன் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.