எண்கணித ஜோதிட ஆச்சர்யங்கள்...
பிறந்ததேதி யை வைத்துதான் பெரும்பாலும் ராசி எண் போன்றவற்றை கணிக்கிறோம், பார்க்கிறோம்... பிறந்த தேதியின் கூட்டுஎண்கள் எந்தளவு வேலை செய்கின்றன... அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்...
பிறந்ததேதி எண் ஒருவரது குணத்தையும் செயல்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரது பிறந்ததேதி 5 என்றால் (5,14,23)அவர் வேல்கமும், டென்சனும் நிரைந்தவர்.. நிறைய பேசுவார். நிறைய விசய ஞானமும் இருக்கும். பதட்டம் அதிகமுண்டு. ஒரு இடத்தில் ரொம்ப நேரம் இருக்க மாட்டார். புதிதாக எதையாவது செய்ய முயற்சித்துக் கொண்டே இருப்பார். மற்றவர்களை கவர முயற்சிப்பார். இவரது வரவை விட செலவுகளெ அதிகம் காணப்படும்.
இவரது பிறந்த தேதி கூட்டு எண்;1,5,6,9 போன்ற வலுவான எண்களாக இருப்பின் நிலையான வெற்றியை பெறக்கூடியவராகவும், நிறைய சம்பாதிக்க கூடியவராகவும் இருப்பார். எதிலும் வெற்றி பெறுவார். இதுவே வலுவில்லாத எண்களாக இருப்பின்,2,3,4,7,8 வாழ்வின் பிற்பகுதி மிகவும் போராட்டம் நிறைந்ததாக காணப்படும். இந்த எண் குறிக்கும் ஆண்டுகளில் மிக கஷ்டமும்,தோல்வியும் உண்டாக்கும்.
2 ஆம் என் ஆதிக்கத்தில் பிறந்து கூட்டு எண் 8,9 என வந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள். வீண் வம்பு,வழக்குகளில் சிக்கி கொள்பவர்களாக இருக்கிறார்கள். குடும்ப வாழ்வு போராட்டம் மிக்கதாக இருக்கிறது.
பிறந்த தேதி 4 ம் கூட்டு எண் 2,4,7,8 என அமைந்தால் கடன் பிரச்சனை, நண்பர்களால் நஷ்டம் என ஏற்படுகிறது....
கூட்டு எண் 7 வருபவர்கள் மன்மத ராஜாக்களாக பலரை பார்த்திருக்கிறேன். கூட்டு எண் 4 ,8 பெரிய கடன் பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படுபவர்களை பார்த்திருக்கிறேன். கூட்டு எண் 7 கலைத்துறையில் நல்ல வெற்றி தரும். கூட்டு எண் 2 குழப்பமான வாழ்வையே தருகிறது. கூட்டு எண் 8 போராட்டம் , தடங்கல், தாமதம் என துன்புறுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.