சந்திரன் கெட்டது பெண்ணாலே என்பது யாருக்குப் பொருந்தும்?
உலகத்தில் பொதுவாக எல்லோர் வாயிலும் வரக்கூடிய பழமொழி இதுவாகத்தான் இருக்கும்.
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
என்ற ஒரு பழமொழி உண்டு.
குருவுக்கு அதாவது, வியாழனுக்கு-சந்திரன், சீடர், சகல வேதங்களையும் கற்க வேண்டி, குருவிடம் குருகுல வாசம் செய்தார் சந்திரன். குரு பகவானுக்குத் தம் சீடராகிய சந்திரனை மிகவும் பிடித்து விட்டது. குருவின் மகைவி தாரா தேவி ஆவாள். அவள் சந்திரனின் அழகில் மயங்கி, சந்தரனை மன்மதக் கலையை கற்றுக் கொள்ள அழைத்தாள். சந்திரனும் அறிவு கெட்டு தாரா ஆதவியுடன் கூடி விட்டார். அதை குரு அறிந்தார். அவரது சாபத்திற்கு ஆளானார் சந்திரபகவான். அதனால் ஏற்பட்டதே மேற்கண்ட பழமொழி.
இதே பாதிப்பை ஜோதிட சாஸ்திரத்திலும் பார்க்கலாம் என்பதே விந்தையான செய்தியாகும்.
அதாவது, ஒருவர் ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்தால் குரு சந்திரயோகம் ஏற்பட்டு அந்த ஜாதகரை உயர்வடையச் செய்யும்.
ஆனால் அதே குருவும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் மனைவி ஸ்தானமான 7-ம் இடத்தில் இருந்தால் குருவுக்கு தம் மனைவியுடன் சந்திரன் கள்ளத் தொடர்பு கொண்டது நினைவுக்கு வர, அதற்கான பாதிப்பை காட்டி விடுவான்.
ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்து விட்டால் அந்த ஜாதகரின் திருமணம் குளறுபடியாகும். குடும்பம் பிரச்சினைக்குரியதாகும்.
இதைத்தான் புலிப்பாணி தமது பாடலில் 'பாரப்பா பால் மதியும், பரம குருவும் 7-ல் ஏற, அப்பா கோதைய வளும் விலகிடுவாள்' என்று குறிப்பிட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.