வெறும் 2,750 டன்னுக்கே இத்தனை ஆபத்தை காட்டியுள்ள இந்த ரசாயணம் எவ்வளவு கொடுர பாதிப்புகளை நம் பூமிக்கும், பயிர்களுக்கும் தரும் என்று யோசித்துப் பாருங்கள்
இந்த மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்கும் போதே நெடி தாளாமல் உயிரிழக்கும் விவசாயிகள் அனேகம் பேர்!
பொறுமைக்கு பூமித் தாயை உதாரணம் சொல்வார்கள்! அப்படி பொறுமை காட்டுவதால் இந்த ஆறு லட்சம் டன்களோடு ஆண்டுக்கு ஐநூறு லட்சம் டன்கள் கொடிய ரசாயண உரங்கள் மற்றும் பத்து லட்சம் பூச்சி கொல்லி, மற்றும் களைக் கொல்லி ஆகியவற்றையும் நம் பூமித்தாய் தாங்கித் தாங்கி இன்னும் நமக்கு உணவளித்துக் கொண்டுள்ளாள்!
ஆயினும், இன்று மூன்றில் ஒரு பங்கு நம் தாய் நிலம் மலடாகிவிட்டது. நாமும் மலடானதோடு புற்று நோய், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, ஜீரண உறுப்புகள் சிதைவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிக் கொண்டுள்ளோம்!
இந்த வெடி மருந்து விவசாயத்திற்கு வந்த கதையை ’’விவசாயம் இன்று, நேற்று, நாளை’’ என்ற நூலில் விரிவாகவே விவரிக்கப்பட்டு உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.