இன்று நீ கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்க்கு பொரியாரே காரணம் ,
இன்று அனைவருக்கும் கல்வி சென்றடைய பொரியாரேக் காரணம்,
புலவர்களிடம் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டுச் சென்றவர் பொரியாரே ,
இப்படி நீ கோவணம் கட்டத் தொடங்கியது, பல் விளக்கத் தொடங்கியது, என அனைத்திர்க்கும் பொரியாரே காரணம் எனக்கூவும் தீராவிடவாதிகளே,
தமிழில் என்ன உள்ளது, அதை தூக்கியெறி, ஆங்கிலத்தை தூக்கிப்பிடி என்றது யார்?
முதன் முதலில் எழுத்துச் சீர்மையை பயன்படுத்தியது யார்?
அடுத்தடுத்து எழுத்துச் சீர்மையை கொண்டு வர, பாடுப்பட்ட பாரதி, வ.உ.சி, குமரப்பா இதழ் ஆசிரியர் முருகப்பா யார்?
திருவள்ளுவரை ஆரியக் கைக்கூலி என்றும், திருக்குறளில் மலம் நாற்றம் வீசுகிறது என்றுச் சொன்னது யார்?
தமிழகம் முழுவதும் 6000 பள்ளிகளைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வியைத் தந்தது யார்?
திருக்குறளை கண்டுப்பிடித்து, திருவள்ளுவரின் நினைவாக பொதுக்கிணறு வெட்டி குறளைப் பதித்த எல்லீசு யார்?
சரி அதுப்போகட்டும் இன்று இட ஒதுக்கீட்டில் தமிழரல்லாதவர் அதிகம் பலனை அடைய யார்க் காரணம்?
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர் தன் தாய்மொழியை ஆட்சி மொழியாகவும், பாடமொழியாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது,
தமிழகத்தில் மட்டும் வட்டார மொழியை முன்மொழிந்ததர்க்கு யார்காரணம்?
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழர்ப் பகுதிகள் பறிப்போக யார் காரணம்?
பொரியார் மண் பொரியார் மண் என்கிறிர்களே? எது பொரியார் மண்?
நாடு முழுவதும் கோயில்களும், மதுக்கடைகளும், சிலைகளும் நிறைந்திருப்பது தானே, திராவிடத்தின் சாதனை?
இன்று தமிழர்கள் தன் இன உணர்வை மறந்து, மொழியுணர்வை இழந்து நிற்பதுதானே திராவிடத்தின் சாதனை?
வேண்டாம் திராவிடர்களே புரட்டு வரலாற்றை புரட்டி புரட்டி எஞ்சியவர்களையும் பாழாக்காதீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.