09/08/2020

மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்றார்- காந்தி...



யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல என்றார் - புரட்சியாளர் லெனின்.

உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு. அந்த இனம் தானாக அழிந்து விடும் என்றான் - இட்லர். 

என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன் என்று முழங்கினான் - அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.

இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம்  தாய்மொழியை ‘உயிரென’ கருதி நின்றார்கள்.

ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடித்தோம். விளைவு.?

நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது..

தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;

பின், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம் தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள் நம்மை திராவிடர்கள் என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.

இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் அனைவரும் தமிழர். நாம் அனைவரும் தமிழர்.’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவுக்கும் காரணம், ‘நம் தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்’ என்று உணராததே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.