08/09/2020

ஈர்ப்பு விதி - 2...



இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான், ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ, தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ, முடியவில்லை..

உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன, நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன, நாடு மக்களை கொல்கிறது, ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள்..,

ஏழை மேலும் , ஏழை ஆகி கொண்டே இருகிறார்கள், வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன.

இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா.. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?

நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது, ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும்.

இதே போல் எலோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும்.

இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல...

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான்.

பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும்.

உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம், எவளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை?

மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?

மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும்.

பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம், அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள், அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள்..

உங்களுக்கு தெரியுமா ?

உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள்.

அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ?

அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம்..

ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி..

அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.