08/09/2020

உமிபோஸ் பேய்...



மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.

கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.

ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.

ஆக்டோபஸு தெரியுமா அப்படிதான் இருக்கும் அதோட உடம்பு.

அந்ந பேய் இருக்கே ஒரு காலத்தில் புத்த துறவியாக இருந்துச்சாம்.

திடீர் என்று நடுக்கடலில் இருந்து முளைச்சு வரும். அப்போ கடலில் சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தா பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி... அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களையெல்லாம் கொல்லாம விடாது.

மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா. இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ.

ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.

மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது.

அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.

நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒருபேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.

சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.

ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டிபோட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.

ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.

இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.