நண்பர்களுக்கு வணக்கம்..
நான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்.
விவாதங்களில் நாகரீகமாகவும் , தெளிவாகவும் என் கருத்துக்களை பதிவு செய்து வருகிறேன்..
என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க. நண்பர்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டவர்கள் என்னை விவாதத்திற்கு அழைக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவது தொடர்கதை..
அதையும் தாண்டி நான் விவாதத்தில் பங்கேற்றால் அந்த விவாதத்தில் பா.ஜ.க. வினர் யாரும் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்..
அதனால் பெரும்பாலான ஊடகங்கள் என்னை அழைப்பதை தவிர்த்து வரும் நிலை உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு தொடர்பாக என்னையும், பா.ஜ.க.வின் சார்பாக நாராயணன் திருப்பதியையும் அழைத்திருந்தார்கள். நான் வந்துள்ளேன் என்பதை அறிந்த நாராயணன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே அமர்ந்து விட்டார்.
அதன் பிறகு தொலைக்காட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று விவாதத்தில் பங்கெடுத்தாலும் வழக்கமான பாணியில் கேள்விகளுக்கு பதில் இன்றி சண்டையிட்டு திசை திருப்பும் அனைத்து முயற்சிகளையும் செவ்வனே செய்தார்.
நான் பா.ஜ.க.வினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன். ஏன் என்னைப் பார்த்து ஓடி ஒளிகிறீர்கள் ? இவ்வளவுதான் உங்கள் வீரமா ? உள்ளபடியே நீங்கள் கோழைகள் இல்லை என்றால் என்னோடு விவாதிப்பதற்கு ஏன் இத்துனை அச்சம்..
நான் ஒரு போதும் தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ, தனி நபர் விமர்சனங்களையோ விவாத்ததில் வைத்ததில்லை..அவ்வாறான ஒரு சிலரோடு கூட விவாதிக்க தயாராக இருக்கும் நீங்கள் என்னோடு விவாதத்தில் பங்கேற்க அச்சப்படுகிறீர்கள் எனில் காரணம், நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதுதான் அர்த்தம்..
நான் மட்டும் இல்லை இது போல் அறிவார்ந்த கேள்விகளை முன் வைக்கும் வேறு சிலரையும் விவாதங்களுக்கு அழைக்கக் கூடாது என்று பா.ஜ.க.வினர் ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்ல மாட்டார்களா என்ன ?
இந்தப் பதிவைப் பார்த்த பின் ஒரு வேளை உங்கள் தன்மானமும், மனசாட்சியும் என் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் சரியான அனுகுமுறை என்று உங்களுக்குச் சொல்லுமே என்றால் இனியாவது உங்கள் கோழைத் தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு விவாதங்களில் என்னோடு நாகரீகமாக உரையாடத் தயாராகுங்கள்..
இல்லையேல் நீங்கள் மிகப்பெரிய கோழைகள் என்பதை மக்கள் இதன் மூலம் அறிந்து கொள்வார்கள்...
இப்படிக்கு..
Anand Srinivasan
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.