03/09/2020

திராவிடத்தால் வீழ்ந்தோம்...



திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தெலுங்கர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

இப்படி தமிழின உணர்வை அழித்து திராவிட மாயை தீணித்த தமிழினத்தின் எதிரியை வழிகாட்டி என்று சொல்லி ஏற்றுக் கொண்டவன் எல்லாம் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வான்...

சிந்தி முட்டாள் தமிழினமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.