03/09/2020

பெரியார் எனும் கன்னட தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி யின் அடித்தளம்...



திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்..

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது..

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது..

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது..

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ..

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது..

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்..

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'...

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா...

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்..

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார்..

அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமைதாங்கினார்...

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி..

அடித்தளமே இப்படியென்றால்.. ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.