20/09/2020

மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?

 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீளுவதில்லை என்றே நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மரணம் - இதுவரை மனிதனால் வெல்ல முடியாத ஒன்று. இந்த பௌதீக உடலோடு அதிகபட்சமாக இதுவரை 110 வயதுவரை வாழும் மனிதர்களையே பார்த்துள்ளோம்.

ஆனால் 1000 வருடம் 3000 வருடம் என சித்தர்கள் இதே உடலோடு வாழ்ந்ததாக கேள்வி மட்டுமே பட்டுள்ளோம்.

ஆம் நாம் கண்ணால் காண்பதையே நம்ம முடியாத போது கேள்விப்பட்டதை வைத்து மட்டும் எதையும் அவதானிப்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்த பௌதீக உடலின் பஞ்சபூத அணுக்களை ஒளியாக மாற்றினால் நாம் மரணமில்லாமல் பல யுகங்கள் கூட வாழலாம்.

ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எதையும் சாராத ஒன்று உண்டெனில் அது ஒளி மட்டுமே. ஆம் ஒளி ஒரு தனிமுதற் பொருள். அது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

உடல் வஸ்துவை ஆற்றலாக மாற்றி, அந்த ஆற்றலை ஒளியாக மாற்ற வேண்டும்.

வள்ளலார் என்ற அணு விஞ்ஞானி கூட தன் மனோ வலிமையால்  உடலை ஒளியாக மாற்றி மரணத்தை வென்றுள்ளான் என  கேள்விப் பட்டுள்ளேன். எனவே மரணத்தை வெல்வது சாத்தியமே.

முக்தி, மோட்சம் இவையெல்லாம் ஒன்றா?

ஆம் இரண்டும் ஒன்றே.

முக்தி அடைந்த பின் இருக்கும் உணர்வு நிலை என்ன?

அமைதியான இடத்தில் அமர்ந்து இரண்டு காதுகளையும் நன்றாக விரல்களால் அடைத்து பாருங்கள்.

அப்போது உங்களுக்குள் ஒரு நாதம் கேட்கும். அந்த நாதம் தான் உங்கள் உண்மையான நிலை.

ஆனால் இப்போது உங்கள் உடலின் உணர்வு இருக்கும். ஆனால் நிர்விகல்ப சமாதி நிலையில் எந்த உணர்வும் அற்ற ஒரு பேரானந்த அமைதியான நாதம் மட்டுமே இருக்கும்.

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதென்பது இதுவே. ஆம் முக்தி நிலையில் நாம் ஒளியில் நாதமாக மட்டுமே இருப்போம்.

இந்த மொத்த பிரபஞ்சத்தின் உண்மை தன்மை ஒலி ஒளி மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.