20/09/2020

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த திமுக ஸ்டாலின் மகன் உதய் தம்பிக்கு, வணக்கம்...

 


கட்சிப் பணிகளில் ‘தீவிரமா’ இருப்பீங்க. ஏன்னா, நீங்க பிறக்கும்போதே அரசியல்வாதியா பிறந்தவரு. அப்படி யார் சொன்னானு கேக்குறீங்களா? நீங்களேதான் சொல்லிக்கிறீங்க! ஆனாலும், இந்தக் கடிதத்தைக் கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து படிச்சிருங்க. ஏன்னா, நான் உங்க தாத்தா காலத்து ஆளு. சொல்றதுல உண்மை இருக்கும். நிறைய பாத்தாச்சு தம்பி... ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!

ஆகஸ்ட் 7-ம் தேதி. உங்க தாத்தா சமாதிக்கு முன்னால, கால்கடுக்க உணர்ச்சிகரமா நின்னுக்கிட்டிருந்தோம். கட்சியோட மூத்த நிர்வாகிகள், கட்சிக்காகப் பலமுறை சிறைக்குப் போனவங்க, தொண்டர்கள்னு நிறைய பேர்... உங்க அப்பாவுக்காகக் காத்திருந்தோம். கார் கதவு திறந்தது, ஆர்வத்தோட பாத்தா... ஏதோ சினிமா ஷூட்டுங்குக்கு வர்றதப்போல பவுசா உங்க அப்பாகூட வந்து இறங்குனீங்க. வணக்கம் வைக்க எடுத்த கைய வளைச்சுப் பின்னால கொண்டுபோயிட்டேன்... கட்சிக்காக நாற்பது வருஷம் ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி கட்சி வளர்த்த நான், கருணாநிதிக்குப் பேரன்னு குறுக்கு வழியில வந்த உங்களை எப்படிக் கையெடுத்துக் கும்பிட முடியும்? சொல்லுங்க... 

கட்சிப் பொறுப்புக்கு வந்ததுதான் குறுக்குவழின்னு பார்த்தா, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வர்றதும் அப்படித்தான் இருக்கு. உங்க அப்பா ஸ்டாலின் இப்படி ஒருமுறைகூட, உங்க தாத்தாவோட வந்து இறங்கினது இல்ல. ஆனா, நீங்க நயன்தாரா, ஹன்சிகா கூடல்லாம் ஒண்ணா நடிச்சுட்டதால அந்தத் தகுதி வந்துட்டதா நினைச்சுக்கிட்டீங்க. குழந்தையா நீங்க கைய கால அசைச்சதெல்லாம் கட்சிப்பணிக் கணக்குல சேராது... குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனதெல்லாம் கட்சி ஆர்ப்பாட்டக் கணக்குல வராது!

ஆரம்பத்துல அரசியலுக்கே வரமாட்டேன்னு நீங்க சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னீங்க. பிறகு நைஸா வந்தீங்க... அதக்கூடக் காமெடினு பொறுத்துக்கிட்டோம். ஆனா, சேர்ந்த கொஞ்ச நாள்லயே, உங்க அடிப்பொடிகள் வெச்சு, ஒவ்வொரு மாவட்டச்செயலாளர்கிட்டயும் “உதயா இளைஞரணிச் செயலாளரா வர ஆசைப்படுறோம்’னு மிரட்டி எழுதி வாங்கினீங்க... பொறுப்புக்கு வந்ததும், ‘சின்னவர்கிட்ட பேசுங்க... சின்னவர்கிட்ட பேசுங்க’னு உங்க அடிபொடிகள வெச்சு மூத்த நிர்வாகிகளை டார்ச்சர் பண்ணீங்க... சினிமாவுல நீங்க பண்ணதுதான் காமெடி... கட்சிக்குள்ள வந்து நீங்க பண்ணதெல்லாம்...

- தொடரும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.