20/09/2020

தியானத்திற்கு தடை மனமே...

 


நீங்கள் கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பபத்தீர்கள் என்றால் சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் . 

உங்களால் சிறிது நேரம் கூட கண்ணை மூடி உட்கார முடியாது..

காரணம் என்ன ,நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம் மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது..

தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை , பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம் செய்ய விடாது.

நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை, தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு , வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள். இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க செய்யும் அதன் தந்திரம் இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .இதிலேயே தான் பெரும்பாலனோர் தியானம் அமைகிறது. இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும் எனக்கு நிம்மதி,மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.

இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது தியானமே ஆகாது. மனம் செய்யும் வித்தைகளை எல்லாம் நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால் மனம் அடங்கி விடும்..

உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக மனம் மாறிவிடும். இப்போது மனம் மூலம் செயல்படும் தியானத்திற்கு பிறகு நீங்கள் மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள். அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம், துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு எல்லாம் ஆவியாக மறைந்து விடும். கொண்டாட்டம், ஆனந்தம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருள் அப்போது புரிய வரும்.

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் , உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக கொண்டாட்டமாக இருக்கும் .

திருமூலர் தியானத்திற்கு பல பாடல்களை எழுதியுள்ளார். அவைகளில் சில எளிய விளக்கத்துடன் இங்கு பதிவிடுகின்றேன்.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர

நூறும் அறுபதும் அறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட

நூறும் அறுபதும் ஆறும் புகுவரே 

– திருமந்திரம் – 729

நூற்றறுபது வரை இடமூக்கு வழியாகவும். வல மூக்கு வழியாகவும் மூச்சை உள்ளே இழுக்க உடம்பில் ஆறு நிலைக்களிலும் ஊயிர்ப்பானது தங்கும். நடுநாடியில் உயிர்ப்பானது மேல்நேக்கி செல்லவதால் வரையறுக்கப்பட்ட நூற்றாண்டை கடந்து நீண்டகாலம் வாழலாம்.

 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியா னத்திலே வாத்தியம் கேட்கலாம்

தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்

சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே – திருமந்திரம் – 730

கோயிலாகிய இந்த உடம்பில் இடம் வலம் செய்யும் மூச்சு பயிற்ச்சியில் சாதித்தால் நம்முள்ளே நாதமும் கேட்க்கலாம். புருவ நடுவில் செஞ்சுடர் ஒளியில் தித்தோம் என்று இனிய சிவ கூத்தையும் காணலாம். இது சத்தியம் ஆகும் இதுவே இறைவனின் ஆணையும் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.