04/10/2020

இசைத் தோற்றம்...

 


ஓசையுலகம் : கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்க பெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை: மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்து கொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு: இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு: இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.