04/10/2020

பெரியார் எனும் கன்னட ராமசாமி நாயக்கர் செய்த தமிழின அழிப்பு... கீழவெண்மணி நினைவுகள்...

 


முன்னாள் கீழத் தஞ்சை, இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி கிராமம்.

1968 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந்தேதி இரவு.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட தமிழ் விவசாயிகள், கூலித் தொளிலாளர்கள் தங்களின் உழைப்பில் அதிகமாக அந்தாண்டு மகசூல் கிடைத்ததால், கூலியாக வழக்கமான நெல்லைவிட வெறும் 4 கை நெல் அதிகமாக கேட்டார்கள். நியாயமானதே.

ஆனால் கூலி அதிகம் கேட்பதா என்ற ஒரே காரணத்திற்காக  நிலப்பண்ணையாளர்கள் அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவனாய் இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு வின் தலைமையில் விரட்டி சென்றனர்..

பயந்துபோய் இராமையா என்பவரின் குடிசையில் தங்கள் உயிரைப் பாதுகாக்க வேறு வழியில்லாமல் ஒண்டிய அவர்களை 44 பேரை (5 ஆண்கள், 16 பெண்கள், 23 குழந்தைகள்) குடிசையோடு வைத்து உயிரோடு எரித்தனர்..

இதைவிடக் கொடூரம் நீதிமன்றத்தீர்ப்பு.

1. காவல் துறை 23 நிலப்பண்ணையாளர்களை கைது செய்தது.

2. மாவட்ட நீதிமன்றம் அதில் 15 பேரை விடுவித்தது. மற்ற 8 பேருக்கும் 1 முதல் 10 ஆண்டு வரை சிறை விதித்தது.

3. ஆனால் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடிவித்தது. தீர்ப்பில் சொன்ன காரணம்..

இவ்வளவு பெரிய பணக்கார நிலப்பண்ணையாளர்கள் இத்தகைய கொடூர வன்முறை செய்பவர்களாக நினைக்க முடியாது.

The High Court (at the State Level) released all the accused and in its Judgment it says:

"the rich landlords could not be expected to commit such violent crimes themselves and would normally hire others to do while keeping themselves in the background." காண்க:

என்னவொரு கொடூர சட்டம் உள்ள நாட்டில் குடி இருக்கிறோம்..

வாய்மையே வெல்லும்...

மக்களுக்காக, மக்களால், மக்களே... வேடிக்கையாக இல்லை?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.