22/11/2020

ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?

தமிழர்நாடு வல்லரசாகும், பேரரசாகும் என்று நாம் சொன்னால் சிரிக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தை விட சிறிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்தான் உலகிலேயே பெரிய பேரரசை உருவாக்கி ஆண்டனர் என்ற உண்மை தெரியுமா?

வரைபடத்தில் சிவப்பாக இருப்பது 1922ல் ஆங்கிலேயர் ஆண்ட பகுதி.

வெள்ளைப் பகுதி அவர்கள் படையெடுக்காத நாடுகள்.

பச்சை நிறம் அவர்கள் தாய்நிலம்.

உலகில் கால் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

உலக மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தனர்.

உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன.

இதில் ஆங்கிலேயர் படையெடுக்காத நாடு வெறும் 22 மட்டுமே.

அவை,

Andorra, Belarus, Bolivia, Burundi, Central African Republic, Chad, Congo, Republic of Guatemala, Ivory Coast, Kyrgyzstan, Liechtenstein, Luxembourg, Mali, Marshall Islands, Monaco, Mongolia, Paraguay, Sao Tome and Principe, Sweden, Tajikistan, Uzbekistan, Vatican City.

அதாவது உலகத்தில் 90% நிலப்பரப்பு அவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்ற முயற்சி நடந்துள்ளது.

33 கோடி பேர் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை (இன்றைய இந்தியாவை போல்  ஒன்றரை மடங்கு) வெறும் ஒரு லட்சம் வெள்ளையர்கள் ஆண்டனர்.

ஆக தாய்நிலமோ மக்கட்தொகையோ முக்கியமில்லை.

பிற நாடுகளை அடக்கி பேரரசாக வரவேண்டிய எண்ணம் கூட நமக்கில்லை.

நம் தாய்நிலத்தை நாம் முப்படைகளுடன் எவரும் அடிபணியாமல் ஆள நினைக்கிறோம்.

இது முடியாதா?

ஆங்கிலேயர் ஒருகாலத்தில் ரோமானியப் பேரரசிடம் அடிமையாக இருந்தது போல தற்போது நாம் இருக்கிறோம்.

நம்மால் ஏன் முடியாது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.