22/11/2020

திருட்டு திராவிடர்களே...

 


கீழடியை பொறுத்தவரை இந்த இடம் தமிழர்களுக்கு சொந்தமானது... இதற்கு ஆரியமும் திராவிடமும் சொந்தம் கொண்டாட முடியாது. இதற்காக இவர்கள் இருவரும் சண்டை போடுவதையும் தமிழர்கள் அனுமதிக்க முடியாது...

இது ஆரிய நாகரீகம் தான் என்று இதுவரை பாஜக சொல்லவில்லை. ஆனால் இது திராவிட நாகரீகம் தான் என்று திராவிட மத பூசகர் வீரமணி கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. காரணம் கீழடி தமிழர் நாகரீகம். திராவிடர்கள் நாகரீகம் அல்ல.

மேலும் கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்காது என்பது நமக்கு தெரிந்த விடயம் தான்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை இதுவரை ஒன்றிய அரசு வெளியிடவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தொன்மையான நாகரீகம் உள்ளது என்பதை ஆரியமும் திராவிடமும் ஏற்காது. அதனால் இவர்கள் இருவர்களையும் சண்டையிட வைத்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதனால் தமிழர் தரப்பின் நியாயங்களை வெளியில் கொண்டு வர முடியாது.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கீழடி தமிழகத்தில் தான் இருக்கப் போகிறது. தமிழர்களுக்கான வலிமையான  அரசு வரும் போது நிச்சயம் கீழடியும் ஆதிச்சநல்லூரும் மீண்டும் தோண்டப்பட்டு உலக அரங்கில் இந்த நாகரீகம் மெய்ப்பிக்கப்படும்.

தற்போதைய தேவை தமிழக தொல்லியல் துறை தலையீடு தான்.

ஒன்றிய அரசு இதை ஆய்வு செய்யும் அதே நேரத்தில்  தமிழக தொல்லியல்  துறை ஆய்வாளர்களும் களத்தில் இருக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த வேண்டியது விடயம் ஆகும் .

கீழடியில் கிடைக்கும் ஒவ்வொரு சான்றுகளும் தமிழர் தொல்லியல் ஆய்வாளர்களின்  மேற்பார்வையில் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தி  அரசின் சதித்திட்டங்கள் இருந்தால் அவற்றை நாம் முறியடிக்கலாம்.  இதற்கு தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு தேவை.  

கீழடியில் ஆரிய திராவிட சிந்தனையாளர்களை உள்ளே விடாமல் இருப்பதும் தமிழர் வரலாற்றுக்கு பாதுக்காப்பு அளிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.