இந்த கொடூரமான சம்பவத்தை படிக்கும் பொழுது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன் ...
சடகோ ஜப்பானில் நாகசாஹியில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உண்டான பிறப்பில் பிறந்த அமெரிக்கன் வெடிக்க செய்த அணுவில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி..
இவளுக்கு அப்பொழுது 2 வயது இருக்கும் வெடித்தவுடன் தோல்கள் உருகி ஓட கழுத்து எலும்பு முறிந்து..
மாடியில் இருந்து புல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டால்.
பின்னாளில் அக்குழந்தைக்கு 12 வயதாகும் பொழுது அணுவின் தாக்கம் அதிகமானதால் லோகேமியா என்ற கொடிய நோய் வந்தது.
அச்சிறுமியை மருத்துவனைக்கு அழைத்து சென்றார்கள்..
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட அனுவின் கதிர்வீச்சால் லுகேமியா என்ற நோயினால்..
ஏறக்குறைய 40,௦௦௦ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகும் அதன் தாக்கம் குறையாமல் பாதிப்படைந்துள்ளனர்..
இந்நிலையில் இந்த சிறுமிக்கும் உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து கொட்ட ஆரம்பித்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்..
ஏற்கனவே மருத்துவனையில் இருந்த இன்னொரு சிறுமி இந்த சடகோ சிறுமியிடம் சொல்லுகிறாள்..
நீ காகிதத்தில் கொக்கு செய்ய வேண்டும் இவ்வாறு ஆயிரம் கொக்கு செய்து விட்டால் நீ சுகமடைந்து வீட்டிற்கு செல்லலாம் என்று மழலை கலந்து சொல்கிறாள்..
இந்த 12 வயது சடகோ சிறுமியும் தனது பிஞ்சி கைகளால் கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள் ஒரு கட்டத்தில் காகிதம் தீர்ந்து போனதும் அருகே கிடந்த மருந்து சீட்டை கேட்டு வாங்கியும் சிறிய கொக்கு செய்ய ஆரம்பிக்கிறாள்..
இப்படியாக 662 கொக்கு செய்ய்கிறாள் 662 வது கொக்கு தான் அவளது கடைசி காகித கொக்கு..
ஆம் அவள் 662 காகித கொக்கு செய்ததும் இவ்வுலகை விட்டு பிரிகிறாள் அந்த பிஞ்சி குழந்தை...
இந்த சம்பவம் ஜப்பான் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..
ஜப்பானில் உள்ள அணைத்து பள்ளியும் சமாதானத்தின் அடையாளமாக காகித கொக்கு செய்ய ஆரம்பிக்கிறார்கள் செய்து அதை மாலையாக கோர்த்து அந்த சிறுமியின் கல்லறையில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்..
ஆயிரம் கொக்கு நான் செய்து விடுவேன் என்று நம்பிய அந்த பாலகன் பாதியில் இறந்தது இதை கேள்வியுற்ற ஜப்பான் பள்ளி குழந்தைகள்..
ஆயிரம் என்ன கோடிக்கணக்கான காகித கொக்குகளையே நான் உனக்காக தருகிறோம் என்று காகித கொக்கு மாலையை அச்சிறுமியின் கல்லறையில் வந்து கட்டி விட்டு போனார்கள்.
அன்றைய காலத்து உலக குழந்தைகள் தங்களது பாக்கெட் மணி யை சேர்த்து வைத்து ஜப்பான் அரசுக்கு அனுப்பி இந்த சடகோ சகாக்கிக்கு ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்றார்கள்.
அதன் அடிப்படையில் உருவானது தான் சடகோவின் நினைவு தூண்...
இன்றும் ஜப்பான் காட்சியகத்தில் மிகுந்த பாதிகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அணுவுலையும் வேண்டாம் அணு ஆயுதமும் வேண்டாம் அமெரிக்க ஏகாதிபத்திய உறவும் வேண்டாம் அமெரிக்க மாப்பிளை கனவும் வேண்டாம்....
நியூயார்க்கை பார்த்து பிரமித்து கொண்டு இருக்கையில் சடோகோ போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் குருதி நினைவில் வருகிறது...
மேலே சொன்னது அணு ஆயுத தாக்குதலால்.. அணு ஆயுதம் இருக்கிறது என்று வாய்கிழிய பேசி ஈராக்கை நாசமாக்கி...
1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பட்டினி சாவையும் பார்த்த பிறகு நியூயார்க்கையோ லாஸ் ஏஞ்சல்ஸையோ பார்த்து பிரமிப்பு ஏற்படவில்லை காரி துப்பவே தோன்றுகிறது....
புகைப்படம்:
ஏதும் அறியா வயதான 2 வயதில் இருந்து 12 வயது வரை இவர்களின் அடக்கியாளும் அதிகாரத்தால் பாதிப்படைந்து வேதனையை அனுபவித்து இறுதியில் மூர்ச்சையாகி போன பிஞ்சு சடகோ சகாகி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.