திண்டுக்கல் மாவட்டம் ஒபுளாபுரத்தை சேர்ந்த எத்திராஜின் மனைவி அம்பிகாபதி. இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், அம்பிகாபதி வீட்டின் அருகே உள்ள பாதையில் நீர் தேங்கி நின்றது. இதுதொடர்பாக அம்பிகாபதி குடும்பத்திற்கும், பக்கது வீட்டில் வசிக்கும் செல்வராஜின் மகன் விஸ்வேஷ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பிகாபதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த விஸ்வேஷ்வரன் அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாபதியை வெட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகாபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவன் விஸ்வேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.