13/11/2020

திராவிடத்தின் மறுபக்கம்...

 


அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது.

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது.

சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து.. என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன் என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.