16/11/2020

நோன்பு பித்தலாட்டம்...

 


ரமலான் மாதம் ஏதோ புனிதமாதம் என்றும் அதில் ஏழைகளின் பசியை உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இசுலாமிய பரப்பிகள் கூறுகின்றனர்.

இரண்டுமே பொய்.

ரமலான்(ரமதான்) என்றால் அரபியில் 'சாவு' என்று பொருள்.

ரமலானுக்கு முந்தைய மாதம் ஷபான் என்பது; இதற்கு 'சிதறுதல்' என்று பொருள்; இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெயில் தீவிரமடையும்; மக்கள் தண்ணீரும் உணவும் தேடி சிதறி அலைவார்கள்; இதற்கடுத்ததுதான் 'சாவு மாதம்' (ramadan) இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெளியே வரமுடியாத அளவு வெயில் அடிக்கும்; இந்த மாதத்தில் அரேபிய மக்கள் பகலில் தூங்குவார்கள்,  இரவில் வெளியே நடமாடுவார்கள்; உணவு தேடி சமைத்து உண்பார்கள்; உணவு கிடைக்காதோர், வயதானவர்கள், நோயாளிகள் என பலர் சாவார்கள்.

இரவில் நடமாடி பகலில் தூங்கும் நடைமுறை பன்னெடுங்காலமாக பாலைவன மக்கள் செய்துவருவதுதான்;

நபிகள் நாயகம் (100 ரூபாய் இருந்தால் அதில் 2.50 ரூபாய் கொடையளிக்க வேண்டும் என்ற ஜக்காத் முறை உட்பட) சில விதிமுறைகளை ஏற்படுத்தி இந்த நடைமுறையைச் சட்டமாக்கினார்;

(ஹஜ் புனிதப் பயணம், காபாவை வலம் வருதல், கால்நடைகளைப் பலியிடுதல் போன்ற ஏற்கனவே அராபியர்களிடம் இருந்த பழக்கங்களையும் நபிகள் நாயகம் சட்டமாக்கியுள்ளார்).

இந்த மாதத்தில்தான் குரான் அருளப்பட்டது; எனவே நீங்கள் நோன்பு இருக்கவேண்டும்; அதனால்தான் கொடுமையான இந்த வெயில்காலத்தை இறைவன் உருவாக்கினான் என்றவாறு அறிவுறுத்துகிறார்.

குரானில் எந்த இடத்திலும் ரமலான் புனிதமாதம் என்றோ, ஏழைகள் பசி உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டதாகவோ கூறப்படவேயில்லை.

(எச்சில் கூட விழுங்கக்கூடாது என்ற அளவு நம் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.