16/11/2020

சித்தர்கள் பறப்பது எப்படி?

நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா.

அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல்.

உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது?

அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறு நடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப் புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணர முடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது.

சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும், புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக் கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்...

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும்.

இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே.. அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.