Dr. கோ. பிரேமா MD(Hom), Prema Gopalakrishnan...
ஒரு தடுப்பூசியை கட்டாயப்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்று இழப்பீடு/காப்பீடு தரவேண்டும் என்ற அடிப்படை அறம் தெரியுமா?
எந்த பொறுப்பும் ஏற்காமல் கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என இந்த ஆட்சியருக்கு தெரியுமா?
பிரதம மந்திரி மோடியும், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமியும் தரமுடியாத இழப்பீடை இந்த ஆட்சியர் தனது மாவட்ட நிதியிலிருந்து தரப்போகிறாரா? அல்லது சொந்த நிதியிலிருந்தா?
இதுபோன்ற தவறான ஆணைகளை அரசியல் தலைவர்கள் செய்யாதபோது, தொடர்ந்து ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
பின் ஓரிரு நாளில் இந்த ஆணையை திரும்பப்பெறுவர்.
அதற்குள் பல பேரை ஏமாற்றி மிரட்டி காரியம் சாதித்திருப்பர்.
வடமாநிலங்களில் இதுபோன்ற ஆணைகள் ஏற்கனவே இரண்டு வந்து பின் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது தடுப்பூசி நாடகத்தின் ஒரு யுக்தி.
மருத்துவரும் செவிலியரும் அனைவரும் போட்டுக்கொள்ளாத தடுப்பூசியை, உழைக்கும் சாமானிய மக்களின் மீது திணிக்கும் இத்தகைய பாசிச போக்கை ,மனித உரிமை மீறல் செயலை கண்டித்து,
அரசு பொறுப்பெடுக்கத்தயாராக இல்லாத சட்டவிரோதமான செயலை செய்த ஆட்சியருக்கு பணிநீக்கமும் தக்க தண்டனையும் கொடுக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.