22/04/2021

ரெய்கி : Reiki and Pranic Healing...

 


ரெய்கி என்றால் என்ன? அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும். இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு (நான்காம்) நிலையில் உள்ளது.  உடல் திசுக்களின் செல்களில் இருக்கும் அந்த ப்ளாஸ்மா வேறு; இது வேறு. இந்தச் சூட்சும உடம்பிற்கு Etheric body, Energy body, Bio-Plasmic body எனப் பல பெயர்களை வைத்து வழங்குகின்றனர்.

நம் உடலில் இருக்கும் ரத்த நாளங்களைப் போல இந்த energy body-யிலும் ஆற்றல் பாதைகள் (energy channels or meridians) இருக்கும்.

இந்தச் சூட்சும உடம்பானது நமது மெய்யுடலைச் சுற்றி ஒரு 4-5 inches கவர்ந்தவாறு கோழி முட்டை வடிவில் இருக்கும்.  நம் உடலின் எந்தப் பாகத்தில் நோய் வருவதாக இருந்தாலும் இந்த energy body-யை முதலில் தாக்கிவிட்டு அதன் பின்னர் தான் நம் உடலில் தாக்கத்தைக் காட்டும்.

அதே போல, நம் உடலில் வெட்டு போன்ற காயங்கள் ஏற்படும் போது இந்த energy body-யிலும் மாற்றங்கள் தெரியும். எனவே இந்த energy body-க்கு ஆற்றல் கொடுப்பதன் மூலம் நோயிற்கான சிகிச்சையை நாம் துரிதப்படுத்த முடியும்.

சரி, இந்த ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுவது? இதென்னடா வேண்டாத வேலை.. பெட்ரோல் டீசல், CNG (fuel) மாதிரி இதற்கும் ஆற்றல் தேவையா என்று பயப்பட வேண்டாம். இந்த ஆற்றலை (energy) நாம் இயற்கையிடமிருந்தே பெறலாம். அதாவது பிரபஞ்சத்திடமிருந்து. சூரியன், காற்று, மரங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளைப் பெற்று உடம்பில் சிகிச்சை தேவைப்படும் இடத்துக்குச் செலுத்துவது தான் இக்கலை. சரி இதற்கு ஏதேனும் கருவி தேவையா? இல்லை. இதெற்கென மருந்து? இல்லை. சிகிச்சை அளிப்பவர் ஒருவர் இருந்தால் மட்டும் போதும். உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எந்த மூலையில் இருப்பவருக்கும் Distant Healing முறையில் கூட சிகிச்சை அளிக்கலாம்.

இவ்வளோ நேரம் சீரியஸா கேட்டுட்டு இருந்தோம்.. இப்போ தான் தெரியுது இது ஒரு கப்சானு என்று சொல்பவர்கள் இப்பொழுதே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். மாறாக இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அதிசயமாக இதை எண்ணுபவர்களும் தீராத நோயினால் அவதிப்படுபவர்களும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.

Common Cold, Fever, Headache, Diabetes, High BP, High Cholestrol, Heart Problems, Thyroid போன்ற Hormone Problems, Kidney Problems, Migraine, Tonsillitis, Sinusitis, STD, Leprosy, Cancer போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் தனியாகவோ, மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து supplement ஆகவோ Pranic Healing சிகிச்சை செய்யலாம்.

இது சிகிச்சை முறையைத் துரிதப்படுத்தும் catalyst (ஊக்கி) ஆகப் பயன்படுகிறது.

Rei என்றால் Universal; Ki என்றால் Life Energy or Prana (நம்முடைய மொழியில்). இதைத் தான் Reiki என்றும் Pranic Healing என்றும் சொல்கின்றனர். இரண்டு கலைகளும் ஒன்று தான்.

ஆனால் இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் சில minor வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

Reiki-இல் ஆற்றல் அளிப்பதை (energizing) மட்டுமே முக்கியமாகக் கொள்கின்றனர்.

Pranic Healing-இல் முதலில் ஆற்றல் மையங்களைச் (Energy Chakras) சுத்தம் செய்வது (Cleansing), பின் ஆற்றல் அளிப்பது, சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நோய் (அ) தீய ஆற்றல் தனக்குப் பரவாமல் பார்த்துக் கொள்வது போன்ற வரிசை முறையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.