மனைவி ஒருத்தி தன் கணவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பும், முருங்கக்காய் சாம்பாரும் செய்து அவனை அசத்த இருக்கும் போது வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துவிடுகிறார்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும், வந்தவர் சமைத்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டால் நமக்கு ஏதும் கிடைக்காது என்று நினைத்து ஒரு நாடகம் ஆடுகின்றனர்.
அதாவது கணவன் மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைய, அவள் கதறி அழ ஆரம்பிகிறாள். இதை பார்த்த உறவினர் நிலைமை சரியில்லை என புரிந்து நடையை கட்டுகிறார்.
உடனே கணவன் எப்படி என் நடிப்பு. நான் அடிப்பது போல் நடித்தேன் அதற்கு அவர் பயந்து சென்று விட்டார் என்றான்.
அதற்கு மனைவியும், நான் மட்டும் சும்மாவா, அடி விழாமலே அடிபட்டது போல் எப்படி அழுது நடித்தேன் என்றாள்.
சிறிது நேரத்தில் வெளியில் இருந்து அந்த உறவினர் நான் மட்டும் சும்மாவா..
வெளியில் போவது போல் பாவனை செய்து மறைந்திருதேன் என்றார்...
யாருகிட்ட...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.