09/04/2021

பரீட்சையை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் ....


பரீட்சை யை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா..

இது தான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப் போகாத ஒரு பஞ்ச் டயலாக்..

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம்.

கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்ல வேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்..

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவார்கள்..

அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது..

 நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்..

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும் போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது.

அதாவது

What are the advantages of bla bla bla?

What are the disadvantages of bla bla?

Briefly explain the following?

Definitions...

இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது.

பாடமாக்கி எழுதினால் மட்டுமே இது மாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது..

புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage, Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனால் கேட்கிறார்கள்.

Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்..

வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வருகின்ற விசயத்தை அரைமணி நேரம் பாடமாக்கி எழுதணுமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.