09/04/2021

Positive energy - Negative energy...

 


எந்த இடத்திலும் ஆற்றல்

உருவாக வேண்டுமெனில்..

நேர்மறை +

எதிர்மறை -

இருந்தால் தான் நடக்கும்...

எதிர்மறை என்ற சொல்லுக்கு தீமை என்ற பொருள் இல்லை...

உலகம் முழுக்க வெளிச்சம் என நீங்கள்  சொல்லுவது இருளை வைத்து தான் அளவிடபடுகிறது.

அப்படியெனில் அடிப்படை எது வெளிச்சமா?  இருளா ?

அதாவது ஒன்றை அளவிட வேண்டுமெனில் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிட வேண்டும்.

நீங்கள் வெளிச்சம் என அளவிடுவது பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கும் இருளுடன்.

இருள் தனக்குள் மாபெரும் ரகசியங்களை வைத்துள்ளது. நீங்கள் ஆச்சரியபடும் விடயங்கள் அனைத்துமே இருளின் தன்மை.

வெளிச்சம் உங்களை உண்மையை உணரவிடாது.

உயிர்களின் இருப்பும் இருள் தான்...

வெளிச்சத்தின் நாகரீக வாரிசுகளை  விட பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின்  வாரிசுகளுக்கு  அதை நன்கு உபயோகப்படுத்த தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.