09/04/2021

குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்...

குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது.

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.

ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன்.

செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.

இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும்.

சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சு சளியை கரைக்கும். திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம்.

அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.

பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசு குளிப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.