14/08/2021

உங்க பெயரில் 2.60 லட்சம் கடன் இருக்கு.. வசூல் பண்ணி விட்டு போகலாம் என்று வந்தேன்..

 




நல்லது. டக்ளஸ் அந்த கால்குலேட்டர் எடு..

நான் இலவச கம்ப்யூட்டர், இலவச சைக்கிள் வாங்கவில்லை. இரண்டும் சேர்த்து 30,000 போடு.

விவசாய கடன் வாங்கவில்லை. அதுக்கு 10,000 போடு.

ஹஜ் யாத்திரை, ஜெருசலேம் யாத்திரை போக துட்டு வாங்கவில்லை. அதுக்கு ஒரு 50,000 போடு..

இலவச பேருந்து பயணம் போகவில்லை. அதுக்கு ஒரு 10,000 போடு. 

எங்க கிட்ட இருந்து வரும் பணத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுறீங்க. நானும் அரசு ஊழியர் இல்லை.. அதுக்கு ஒரு லட்சம் போடு..

அந்த உதவித்தொகை, இந்த உதவித்தொகை எதுவும் வாங்கவில்லை. அதுக்கு 50,000  போடு..

எந்த நலவாரியத்தில் இல்லை. அதிலிருந்து சல்லி பைசா வாங்கவில்லை. அதக்கு 10,000 போடு.

தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை எதுவும் வாங்கவில்லை. அதுக்கு 30,000  போடு..

புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் வாங்கவில்லை. அதுக்கு 30,000 போடு.

மொத்தம் எவ்வளவு ஆச்சு.

மூணு லட்சத்து இருபதாயிரம் வந்துச்சு.

நான் உனக்கு எவ்வளவு தரணும்.

2,60,000..

நீ எனக்கு எவ்வளவு தரணும்.

3,20,000.

அந்த 3,20,000 த்தில் 2,60,000 எடுத்துக்க. மிச்சம் 60,000 எப்படா தருவிங்க...

🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.