14/08/2021

சம நீதி...

 


சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..

மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..

அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..

இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.

தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.