22/05/2024

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது...

 


இது அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க கேரள அரசு திட்டமிடும் செயல்..

நம்ம ஊர் காம்ரேட்ஸ் மற்றும் இன்னும் பிற திடல் ஓங்கோல் ஒட்டுண்ணி கட்சிகள் அமைதிகாக்க...

வரும் 27ம் தேதி தாராபுரத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளார்கள்.

தமிழ் நாட்டை அண்டி வாழும் கேரளா இதுவரை தமிழர்களுக்கு துரோகம் மட்டுமே செய்துள்ளது.

குற்றாலம் தேனருவி க்கு பொதுமக்களை விடாமல் வனத்துறை தடை போட்டு விட்டது.

அங்கே வாழ்ந்த பூர்வ குடிகளை கேரளா வனத்துறை சுட்டதால் சிலர் இருந்து விட்டனர்.

அதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை இன்னும் வழக்கே பதிவு செய்யவில்லை.

தேனருவி வனப்பகுதி தமிழர் வசம் தான் இருக்கிறதா..? என்கிற கேள்வி எழுகிறது .

அதேபோல சித் ரா பெளர்ணமி நாளை தவிர தமிழர்களின் கண்ணகி கோயிலுக்கி தமிழர்களுக்கு அனுமதி இல்லை.

அந்த கோயில் இடிபாடுகளுடன் இருக்கிறது.

அதை  தமிழக அற நிலையதுறை வசம் கூட கேரளா அரசு கொடுக்க முன் வரவில்லை..

ஆனால் குமரி மாவட்டத்தில் இருக்கும் பத்மநாப புர அரண்மனை மட்டும் கேரளா அரசின் பராமரிப்பில் இருக்குமாம்..

என்னங்கடா  இது சட்டம்...? 

திராவிடர்கள் தமிழர்களின் எல்லா உரிமைகளையும் விற்று விடுவார்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.