19/01/2025

அண்ணல் அம்பேத்கர் சூத்திரர் யார் என்ற ஆய்வு நூலை 1946 ல் வெளியிட்டார்...

 


அந்நூலில் பிராமணர் மற்றும் சத்திரியர்களாக இருந்து வேத மரபுகளை பின்பற்றாது கைவிட்டவர்கள் மற்றும் வேத மரபுகளை எதிர்த்தவர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டனர் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

இதற்கு முன்பே அதாவது 1923 ல் ஐயா கண்ணப்பர் என்பவர் சூத்திரர் யார் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் போரில் வெல்லப்பட்டு அடிமையானவர்களே சூத்திரராக்கப் பட்டனர் என்றும் அசோகர் ஆட்சியில் கூட தமிழர் அரசர்களான சேர சோழ பாண்டியர்கள் தனி ஆட்சி நடத்தினர்.



தமிழர்கள் ஆரியர்களை வென்றடக்கியிருக்கிறார்கள். தமிழர்களை ஆரியர்கள் வென்றமைக்கான எந்தச் சான்றுமில்லை யென்று சூத்திரர் பெயர் தமிழருக்கு பொருந்தாது. சூத்திரப்பெயர் ஆரியருக்கே பொருந்தும் என்கிறார் ஐயா கண்ணப்பர்.

அப்படியே தோழர் ஈவேரா கருத்தியலுக்கு வருவோம். வேதங்கள் நம்மை சூத்திரர்கள் என்று சொல்கிறது. நாமெல்லாம் வேசிமக்கள் என்று ஆரியக் கோட்பாட்டை ஏற்று ஆமாம் சாமி போடுகிறார்? தன்னை பெருஞ்சூத்திரன் என்கிறார்.

இம்மூவரில் யார் ஆரிய அடிமை ஆரிய அடிவருடி என்பதை சிந்தித்து தெளிவு பெறுங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.