தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2012ல் அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.745 கோடி செலவில் 107 அணைகள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த அணைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை வடக்கு பச்சையாறு, நம்பியாறு, அடவிநயினாறு, கொடு முடியாறு, பொய்கையாறு, மோர்தானா, சித்தாமல்லி கோமுகி நதி, விடூர் உட்பட 16 அணைகளில் வேலை முடிந்ததாகவும், 42 அணைகளில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர மின்வாரிய கட்டுபாட்டில் உள்ள 16 அணைகளில், ஒரு சில அணைகளில் மட்டுமே புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கொரு முறை அணைகள் பாதுகாப்பாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு தமிழகம் முழுவதும் உள்ள 127 அணைகள் நீர் இருப்பை தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளதா?
மண் படிமங்களின் அளவு எவ்வளவு?, நீர் இருப்பை உயர்த்தலாமா?, அணைகள் பலவீனமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தது.
இக்குழு தற்போது வரை 62 அணைகள் வரை ஆய்வு செய்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது...
குழுவினர் கடந்த 1 மாதத்திற்கு மேலாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர்..
இக்குழு கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 62 அணைகளை ஆய்வு செய்தது.
அதில், 45 அணைகளில் பராமரிப்பு பணிகள் இல்லை. கொள்ளளவு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடந்த அணைகளும் அடங்கும்.
பணிகளே நடக்காமல் நடந்ததாக பணம் சுருட்டிய சம்பவமும் நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையாகவே உள்ளது.
இது தொடர்பாக அக்குழு தாக்கல் செய்த தனது அறிக்கையில் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளது என்றார்.
கொள்ளையடியுங்கள், திருடுங்கள். அது எந்த நிதியில் என்று ஒரு வரைமுறை உள்ளது. இன்று தமிழகமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.
கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் டெல்லியில் 35 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் இவ்வாறு செய்திகள் வந்திருப்பது, கடும் வேதனையையும், வருத்தத்தையும் தமிழக மக்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.