18/04/2017

அண்டை மாநிலங்கள் அசுர வளர்ச்சி.. சீரழியும் தமிழகம், ஏமாறும் தமிழன்...



கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில்கேட்ஸை வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.

நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார்.

மேலே சொன்ன எந்த மாநிலமும் சைக்கிளோ, மடிக்கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.

ஏன் தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்.. பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?

நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?

ஏரி குளங்கள் தூர் வாருவதை விட பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?

ராஜபக்ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார். தாய் மண்ணில்  தமிழ்நாட்டை, தமிழனை அழித்தது யார்?

ஓட்டு போடுவதை ஒரு சமுதாய கடமையாக பார்க்காமல், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் தானே?

நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச டிவி,  மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள், இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை.

எதை நோக்கி எம் தமிழகம் பயணிக்கிறது..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.